சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர்: இறுதிப் போட்டியில் தன்வி சர்மா

சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர்: இறுதிப் போட்டியில் தன்வி சர்மா
Updated on: 
1 min read

லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா, சகநாட்டைச் சேர்ந்த உன்னதி ஹூடாவை எதிர்த்து விளையாடினார். இதில் தன்வி சர்மா 11-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, உக்ரைனின் போலினா புக்ரோவா, யெவ்ஹேனியா கன்டெமிர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ட்ரீசா-காயத்ரி ஜோடி 13-21, 21-10, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தது.

சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர்: இறுதிப் போட்டியில் தன்வி சர்மா
இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்

X