இளையோர் ஒலிம்பிக்கில் தன்வி சாதனை

தன்வி பத்ரி

தன்வி பத்ரி

Updated on: 
1 min read

தாகர்: செனகல் நாட்​டின் தாகர் நகரில் நடைபெற்ற இளை​யோர் ஒலிம்​பிக் மகளிருக்​கான பாட்​மிண்​டனில் ஒற்​றையர் பிரிவு இறுதி சுற்​றில் இந்​தி​யாவின் தன்வி பத்ரி, சீனாவைச் சேர்ந்த யி ஷின் ஜாங்​குடன் மோதினார்.

இதில் தன்வி பத்ரி 21-15, 13-21, 24-26 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார். இறுதி சுற்​றில் தோல்வி அடைந்த தன்வி பத்ரி வெள்ளி பதக்​கம் பெற்​றார்.

இதன் மூலம் இளை​யோர் ஒலிம்​பிக் பாட்​மிண்​டன் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் பதக்​கம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற சாதனையை படைத்​தார் தன்வி பத்ரி.

<div class="paragraphs"><p>தன்வி பத்ரி</p></div>
லண்​டன் ஓபன் ஸ்கு​வாஷ்: கால் இறுதியில் வேலவன்

X