

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் லண்டன் ஓபன் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், 124-ம் நிலை வீரரான பராகுவேயின் பிரான்செஸ்கோ மார்கான்டோனியோவை எதிர்த்து விளையாடினார்.
இதில் வேலவன் 11-5, 11-7, 14-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.