ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி தமிழகம்
Updated on: 
1 min read

சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்​நாடு - சண்​டிகர் அணிகள் இடை​யி​லான போட்டி சண்​டிகரில் உள்ள செக்​டார் 16 மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழக அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 571 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து விளை​யாடிய சண்​டிகர் அணி நேற்​றைய 3-வது நாள் ஆட்​டத்​தில் 37.3 ஓவர்​களில் 94 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் ஆனது. தமிழக அணி சார்​பில் சோனு யாதவ் விக்​கெட்​களை வீழ்த்​தினார். சரவண குமார், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

பாலோ-ஆன் பெற்ற சண்​டிகர் அணி 477 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி நிலை​யில் நேற்​றைய 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 57 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக அர்​ஜுன் ஆசாத் 60, கேப்​டன் மனன் வோரா 59 ரன்​கள் சேர்த்​தனர். தமிழக அணி தரப்​பில் அஜித் ராம் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினார். சாய் கிஷோர் 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினார்.

கைவசம் 3 விக்​கெட்​கள் மட்​டுமே இருக்க 288 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டத்தை சந்​திக்​கிறது சண்​டிகர் அணி. இத​னால் தமிழக அணி இன்​னிங்ஸை வெற்​றியை எதிர்​நோக்கி உள்​ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி தமிழகம்
கோலி, காம்போஜ் அபாரம்: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

X