

ஜெய்ப்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணி 115.3 ஓவர்களில் 363 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஆந்த்ரே சித்தார்த் 21, சோனு யாதவ் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 98.4 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆந்த்ரே சித்தார்த் 192 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சோனு யாதவ் 13, நிதிஷ் ராஜகோபால் 1, தேவேந்திரன் 0, சரவண குமார் 0, கேப்டன் சாய் கிஷோர் 2, தீபேஷ் ரன்களில் நடையை கட்டினர்.
வாஷிங்டன் சுந்தர்26 ரன்கள் சேர்த்தார். 89 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைவிளையாடிய ராஜஸ்தான் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம்6 விக்கெட்கள் இருக்க இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது ராஜஸ்தான் அணி.