

காபூல்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் இந்தியா, இலங்கை நாடுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் பஸல்ஹக் பரூக்கி, ஆல்-ரவுண்டர் குல்பதின் நயீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி குரூப் டி பிரிவில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நியூஸிலாந்துடன் மோதவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது இஷாக், செடிகுல்லா அடல், டார்விஷ் ரசூலி, ஷஹி துல்லா கமல், அஸ்மத்துல்லா ஓமர்சாய், குல்பதீன் நயீப், முகமது நபி, நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், பஸல்ஹக் பரூக்கி, அப்துல்லா அகமதுஸாய்.