டி20 கிரிக்கெட்: 100-வது விக்கெட் வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா!

டி20 கிரிக்கெட்: 100-வது விக்கெட் வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா!
Updated on
1 min read

தரம்சாலா: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3-வது டி20 ஆட்டம் நேற்று இமாச்சல பிரதேசத்திலுள்ள தரம்சாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் வீழ்த்திய 100-வது விக்கெட்டாகும் இது.

மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பாண்டியா பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை அர்ஷ்தீப் சிங் (112 விக்கெட்), ஜஸ்பிரீத் பும்ரா (101 விக்கெட்) ஆகியோர் செய்துள்ளனர்.

வருண் சக்ரவர்த்தி சாதனை: இந்தப் போட்டியின்போது வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்களை சாய்த்துள்ளார் வருண்.

இதைத் தொடர்ந்து 32 போட்டிகளிலேயே 50 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார் வருண். இந்த வரிசையில் குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

டி20 கிரிக்கெட்: 100-வது விக்கெட் வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா!
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி | India vs South Africa 3rd T20I

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in