

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் 3வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவிலுள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் இறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. குயிண்டன் டிகாக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் ஓப்பனிங் செய்தனர். இதில் டிகாக் 1 ரன்னுடனும், ரீஸா டக் அவுட் ஆகியும் வெளியேற்றப்பட்டனர். அடுத்து இறங்கிய எய்டன் மார்க்ரம் 61 ரன்கள் குவித்து அணியை ஸ்கோரை உயர்த்தினார்.
எனினும் அடுத்தடுத்த இறங்கிய போட்டியாளர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிவால்ட் ப்ரெவிஸ் 2, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 9, கார்பின் போஷ் 4, டோனோவன் ஃபெரீரா 20, மார்கோ ஜேன்சன் 2, அன்ரிச் நோர்ஜே 12 என 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்களில் சுருண்டது.
அடுத்து இறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா 35, ஷுப்மன் கில் 28 ரன்கள் எடுத்தனர். திலக் வர்மா 26, சூர்யகுமார் யாதவ் 12, ஷிவம் டூபே 10 என 15 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.