“தோனி, ரோஹித் சர்மா போல் சூர்யகுமார் பெரிய கேப்டன் அல்ல” - கைஃப் சூசகம்

“தோனி, ரோஹித் சர்மா போல் சூர்யகுமார் பெரிய கேப்டன் அல்ல” - கைஃப் சூசகம்
Updated on
1 min read

எதிரணியில் இடது கை பேட்டர்கள் அதிகம் உள்ளனர் என்பதற்காக அக்சர் படேலை டிராப் செய்து வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுத்ததை கடுமையாகச் சாடியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.

அக்சர் படேல் வைஸ் கேப்டன், அவரை டிராப் செய்யலாமா என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வி அன்று பேசிய யூடியூப் வீடியோவில் கடுமையாகக் கிண்டல் செய்தார், இதனால் இந்திய அணி ‘மகா பொட்டலம்’ ஆனது என்று கிண்டலடித்தார்.

அந்த சூப்பர் 8 தோல்விக்குக் காரணமே நிறைய உத்தித் தவறுகள், அணித்தேர்வுத் தவறுகள் என்று போட்டி தொடங்கும் முன்பே இந்திய அணி தோற்றுவிட்டது. இந்நிலையில் முகமது கைஃப் 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற போது எந்த ஆஃப் ஸ்பின்னர் அணியில் இருந்தார், சுந்தரும் இல்லை அஸ்வினும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி, இதெல்லாம் அதீதமான யோசனைகள் என்று சூர்யகுமாரின் முடிவை கடுமையாக விமர்சித்தார்:

“பெரிய கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா போன்றோர் அனைத்து அடிப்படைகளையும் நிறைவு செய்யும் ஒரு பிளேயிங் லெவனைத் தேர்வு செய்வார்கள். எதிரணியின் இடது கை வீரர்கள் நிறைய உள்ளனர் என்பதற்காக ஆஃப் ஸ்பின்னர் தேவை என்று திடீரென சுந்தரைக் கொண்டு வந்தது போல் அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

இது எதைக் காட்டுகிறது என்றால் தயாரிப்பின்மையையே விளம்புகிறது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற போது யார் ஆஃப் ஸ்பின்னர்? சுந்தர் இல்லை அஸ்வினும் இல்லை. அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அக்சர் படேல் ஆட்ட நாயகன். அவர் அன்று ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், மொயின் அலி ஆகியோரை வீழ்த்தினார்.

இதில் மொயின் அலி இடது கை வீரர், ஏன் அவரை வீழ்த்தவில்லையா அக்சர் படேல்? சார் அதெல்லாம் ஒண்ணும் இல்ல, கேஷவ் மகராஜ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு என்ன? ஒருவரை கேப்டன் ஆதரித்தால் அவர் நிச்சயம் நன்றாகவே செயல்படுவார்.

ஐசிசி தொடர்களில் மேட்ச் வின்னர் என்று அக்சர் படேல் தன்னை நிரூபித்தவர். 2024 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சிறு அதிரடி இன்னிங்ஸையும் ஆடியதால் அவர் ஆட்ட நாயகன் விருதை வெல்லத் தகுதியுடையவராக இருந்தார். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 128, அக்சர் படேலின் ஸ்ட்ரைக் ரேட் 150.

அக்சர் அந்த மேட்சில் 4 சிக்சர்களை விளாசினார். அரையிறுதி, இறுதிப் போட்டி இரண்டையும் இந்தியா வென்றது அக்சர் படேலால்தான், ஆனால் இவர்கள் அவரை ரொம்ப சாதாரணமாக புறம் தள்ளுகின்றனர். எப்படி இது?”

என்று கைஃப் விளாசித் தள்ளினார்.

“தோனி, ரோஹித் சர்மா போல் சூர்யகுமார் பெரிய கேப்டன் அல்ல” - கைஃப் சூசகம்
“வீழ்த்தப்படக் கூடிய அணிதான் இந்தியா, ஏனெனில்...” - டேவிட் மில்லர் விவரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in