

ராவல்பிண்டி: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 434 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 27.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கமிந்து மெண்டிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் குஷால் மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வாவுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார். 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 102 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. தனஞ்ஜெயா டி சில்வா 167 ரன்களும், குஷால் மெண்டிஸ் 117 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.