ஹர்திக் பாண்டியாவை ரூ.18 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்: ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்றம்

பதிலுக்கு அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கு மாற்றம்
ஹர்திக் பாண்டியாவை ரூ.18 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்: ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்றம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் மும்பை அணி​யின் கேப்​டனாக செயல்​பட்டு வந்த ஆல்​ரவுண்​டரான ஹர்​திக் பாண்​டியா ரூ.18 கோடி ஒப்​பந்​தத்​துடன் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்​ளார். அவருக்கு பதிலாக இடதுகை வேகப்​பந்து வீச்​சாளரான அர்​ஷ்​தீப் சிங், மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு பரிமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஹர்​திக் பாண்​டி​யாவை ரூ.16.35 கோடிக்கு மும்பை அணி வாங்​கி​யிருந்​தது. இந்​தத் தொகை​யில் இருந்து ரூ.1.65 கோடிக்கு கூடுதலாக பஞ்​சாப் அணிக்கு அவர், பரிமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். அவருக்கு பதிலாக அர்​ஷ்​தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு மும்பை இந்​தி​யன்ஸ் அணி வாங்கி உள்​ளது. அவரது தொகை​யில் எந்​த​வித மாற்​றமும் இல்லை.

இதன் வாயி​லாக ஐபிஎல் வரலாற்​றில் வீரர்​கள் பரிமாற்​றத்​தில் இந்த தொகை சாதனை படைத்​துள்​ளது. இதற்கு முன்​னர் சஞ்சு சாம்​சனை 2026-ம் ஆண்டு சீசனுக்​காக சிஎஸ்கே அணி ரூ.18 கோடிக்கு ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் இருந்து வாங்​கி​யிருந்​தது. இதற்​காக ரவீந்​திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்​கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்​கும் பரிமாற்​றம் செய்​திருந்​தது.

ஐபிஎல் தொடரில் இது​வரை ஹர்​திக் பாண்​டியா 162 ஆட்​டங்​களில் விளை​யாடி 146.28 ஸ்டிரைக் ரேட்​டுடன் 2,955 ரன்​கள் குவித்​துள்​ளார். பந்​து​வீச்​சில் 82 விக்​கெட்​களை வீழ்த்தி உள்​ளார்.

மறு​புறம் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​காக 8 சீசன்​களாக விளை​யாடி வந்த அர்​ஷ்​தீப் சிங் தற்​போது மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு மாறியுள்​ளார். 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறி​முக​மான அவர், சிறந்த இடது கை வேகப்​பந்து வீச்​சாளர்​களில் ஒரு​வ​ராக உரு​வெடுத்​தார்.

இது​வரை 96 ஐபிஎல் ஆட்​டங்​களில் விளை​யாடி 111 விக்​கெட்​களைக் கைப்​பற்​றியுள்​ளார். இதன்​மூலம் பஞ்​சாப் அணி​யின் வரலாற்​றில் அதிக விக்​கெட்​கள் வீழ்த்​திய வீரர் என்ற சாதனையையும் படைத்​துள்​ளார்.

2025-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 21 விக்​கெட்​களை​யும், 2026-ம் ஆண்டு சீசனில் 14 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினார். 27 வய​தான அர்​ஷ்​தீப் சிங், இந்​திய அணிக்​காக சர்​வ​தேச டி20 போட்​டிகளில் 104 ஆட்​டங்​களில் விளை​யாடி 151 விக்​கெட்​களைக் கைப்​பற்​றியுள்​ளார்.

இதன்​மூலம் டி20 கிரிக்​கெட்​டில் இந்​திய அணி​யில் அதிக விக்​கெட்​கள் வீழ்த்​திய பந்​து​வீச்​சாளர் என்ற பெரு​மையையும் பெற்​றுள்​ளார்.

ஹர்திக் பாண்டியாவை ரூ.18 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்: ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்றம்
நியூஸிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு

X