பொறி​யியல் சேர்க்கை 88,930 பேருக்கு ஒதுக்​கீடு ஆணை

பொறி​யியல் சேர்க்கை 88,930 பேருக்கு ஒதுக்​கீடு ஆணை
Updated on
1 min read

சென்னை: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான 2-வது சுற்று கலந்​தாய்வு முடிவில் இதுவரை 88,930 பேருக்கு கல்​லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்​கப்பட்​டது.

இது குறித்து தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​குழு நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு:

பிஇ, பிடெக் படிப்​புக்​கான கலந்​தாய்​வில் சிறப்பு பிரிவு, பொதுப்​பிரி​வில் முதல்​சுற்​று, 2-ஆம் சுற்று கலந்​தாய்வு முடி​வில் மொத்​தம் 88,930 பேருக்கு இடம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 3-வது சுற்று கலந்​தாய்​வில் பொதுப்பிரி​வில் தரவரிசைப் பட்​டியலில் 135.50 முதல் 77.50 வரை​யில் கட் ஆஃப் மதிப்​பெண் பெற்​றவர் களும், அரசு பள்ளி மாணவர்​களில் தரவரிசை 135.50 முதல் 77.50 வரை​யில் கட்​ ஆஃப் பெற்ற மாணவர்​கள் என ஒரு லட்​சத்து 2 ஆயிரத்து 719 மாணவர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் தாங்​கள் விரும்​பும் கல்​லூரியை 19-ம் தேதிக்​குள் தேர்​வுசெய்ய வேண்​டும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி பொறி​யியல் படிப்​பில் சேர்​வதற்கு விண்​ணப்​பம் செய்​யாத மாணவர்​களும், துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்​களும் துணை கலந்​​தாய்​வுக்​கு ஆகஸ்​ட்​ 31-ம்​ தேதி வரை ஆன்​லைனில்​ விண்​ணப்​பிக்​கலாம்​.

பொறி​யியல் சேர்க்கை 88,930 பேருக்கு ஒதுக்​கீடு ஆணை
​மாற்று அரசி​யலுக்​கான அடித்தளமா? - கவனம் ஈர்க்கும் தவெக அரசின் முதல் 100 நாட்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in