ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மோதல்: ஹைதராபாத்தை சமாளிக்குமா கொல்கத்தா அணி?

ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மோதல்: ஹைதராபாத்தை சமாளிக்குமா கொல்கத்தா அணி?
Updated on
2 min read

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்​சி​யாக 5 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று அசத்தி உள்​ளது.

நடப்பு சீசனில் அதிக ரன்​கள் குவித்​துள்ள வீரர்​களின் பட்​டியலில் அபிஷேக் சர்மா 2-வது இடத்​தி​லும், ஹெய்ன்​ரிச் கிளாசன் 3-வது இடத்​தி​லும் உள்​ளனர். இதில் அபிஷேக் சர்மா ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 425 ரன்​கள் குவித்​துள்​ளார். அவரது ஸ்டிரைக் 209.35 ஆகும். 40 பவுண்​டரி​களை​யும், 31 சிக்​ஸர்​களை​யும் பறக்கவிட்டுள்ளார்.

அதேவேளை​யில் கிளாசன் 4 அரை சதங்​களு​டன் 414 ரன்​கள் சேர்த்​துள்​ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 157.41 ஆகும். 32 பவுண்​டரி​களை​யும், 18 சிக்​ஸர்​களை​யும் விளாசி​யுள்​ளார். 3 அரை சதங்​களு​டன் 197.46 ஸ்டிரைக் ரேட்​டுடன் 321 ரன்​கள் சேர்த்​துள்ள இஷான் கிஷனும் தனது அதிரடி​யால் ஆட்​டத்​தின் போக்கை மாற்​றும் திறன் கொண்​ட​வர். டிரா​விஸ் ஹெட், மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 30 பந்​துகளில் 76 ரன்​கள் விளாசி பார்​முக்கு திரும்​பி​யிருந்​தார்.

அவரது அதிரடி​யால் மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 244 ரன்​கள் இலக்கை துரத்​திய ஹைத​ரா​பாத் அணி 8 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டிருந்​தது. பின் வரிசை​யில் நித்​திஷ் குமார் ரெட்​டி, சலீல் அரோரா ஆகியோ​ரும் மட்​டையை சுழற்​றக்​கூடிய​வர்​களாக உள்​ளனர். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி​யின் பேட்​டிங் வரிசை, கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் பந்​து​வீச்சு துறைக்கு கடும் சவால்​தரக்​கூடும்.

ஹைத​ரா​பாத் அணி​யின் பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் பிரஃபுல் ஹிங்​கே, இஷான் மலிங்​கா, ஷகிப் ஹுசைன், நித்​திஷ் குமார் ரெட்டி ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கும் வகை​யில் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இவர்​களு​டன் பாட் கம்​மின்​ஸின் வரு​கை​யும் கூடு​தல் பலம் சேர்த்​துள்​ளது.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா அணி 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 5 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 5 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்ளது. தனது முதல் 6 ஆட்​டங்​களில் ஒரு வெற்​றியைகூட பெற முடி​யாமல் கொல்​கத்தா அணி தவித்​தது. எனினும் அந்த அணி கடைசி​யாக விளை​யாடிய 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி கண்டு மீண்டு வந்​துள்​ளது. இதனால் இன்​றைய ஆட்​டம் விறு​விறுப்​பாக அமையக்​கூடும்.

நடப்பு சீசன் கொல்​கத்தா அணிக்கு சிறப்​பான​தாக அமையவில்லை என்ற போதி​லும் அணி நிர்​வாகம் ரஹானேவை கேப்​ட​னாகத் தொடரச் செய்​துள்​ளது. எனினும் இது​வரை அவர், தனது அணியை வழிநடத்​திச் செல்​வ​தில் பெரிய தாக்​கத்தை ஏற்படுத்​த​வில்​லை. ஆனால் தனது பேட்​டிங் அணுகு​முறை​யில் ரஹானே மாற்​றத்தை காட்டி வரு​கிறார்.

மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு எதி​ராக 40 பந்​துகளில் 67 ரன்​களும், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதி​ராக 24 பந்​துகளில் 41 ரன்​களும் விளாசி கவனம் ஈர்த்​தார். இருப்​பினும் களத்​தில் அவரது தலை​மைத்​து​வ​மும் அவர் எடுக்​கும் முடிவு​களும் இன்​னும் கேள்விக்​குறி​யாகவே உள்​ளன.

தொடக்க வீரர்​களான ஃபின் ஆலன், டிம் ஷெய்​பர்ட் ஆகியோர் பேட்​டிங்​கில் எதிர்​பார்த்த அளவுக்கு சிறப்​பாக செயல்​பட​வில்​லை. அங்​ரிஷ் ரகு​வன்​ஷி, கேமரூன் கிரீன், ரோவ்​மன் பவல் ஆகியோரிடம் இருந்​தும் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை. இது ஒரு​புறம் இருக்க ரச்​சின் ரவீந்​தி​ரா​வுக்கு வாய்ப்பு கொடுக்​கப்​ப​டா​மல் வெளியே அமர​வைக்​கப்​பட்​டுள்​ளார். பேட்​டிங்கை பலப்​படுத்​தும் வகை​யில் இன்​றைய ஆட்​டத்​தில் அவர், தொடக்க வீர​ராக களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் கொல்​கத்தா அணி​யின் வேகப்​பந்து வீச்சு துறை பலவீன​மாக காணப்​படு​கிறது. வருண் சக்​ர​வர்த்​தி​யின் மந்​த​மான தொடக்​க​மும் பின்​னடை​வாக அமைந்​துள்​ளது. இதனால் அனுகுல் ராய், வைபவ் அரோரா மற்​றும் கார்த்​திக் தியாகி போன்ற உள்​நாட்டு வீரர்​களையே பெரிதும் சார்ந்து இருக்க வேண்​டிய நிலை உள்​ளது.

நடப்பு சீசனில் ஹைத​ரா​பாத் - கொல்​கத்தா அணி​கள் 2-வது முறை​யாக மோதுகின்​றன. கடந்த 2-ம் தேதி ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணியை 65 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஹைத​ரா​பாத் அணி தோற்​கடித்து இருந்​தது. இந்த ஆட்​டத்​தில் 227 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி 16 ஓவர்​களில் 161 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து இருந்​தது. இந்த தோல்விக்கு இன்​றைய ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மோதல்: ஹைதராபாத்தை சமாளிக்குமா கொல்கத்தா அணி?
நிதி நெருக்கடியிலும் மூலதனச் செலவு ரூ.12.22 லட்சம் கோடி இலக்கை எட்டுவதில் மத்திய அரசு உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in