நிதி நெருக்கடியிலும் மூலதனச் செலவு ரூ.12.22 லட்சம் கோடி இலக்கை எட்டுவதில் மத்திய அரசு உறுதி

நிதி நெருக்கடியிலும் மூலதனச் செலவு ரூ.12.22 லட்சம் கோடி இலக்கை எட்டுவதில் மத்திய அரசு உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சி​யைத் தக்​கவைக்க நடப்பு நிதி​யாண்​டில் திட்​ட​மிடப்​பட்ட ரூ.12.22 லட்​சம் கோடி மூலதனச் செலவு இலக்கை எட்​டு​வ​தில் மத்​திய அரசு உறு​தி​யாக உள்​ள​து.

அசோகா பல்​கலைக்​கழகம் ஏற்​பாடு செய்​திருந்த மாநாட்​டில் பேசிய மத்​திய செல​வினங்​கள் துறை செயலர் வி.வல்​னம் இது குறித்​துக் கூறிய​தாவது: உலகளா​விய சூழலால் நிதி நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது என்​பது யதார்த்​த​மான உண்​மை. இருப்​பினும், நாட்​டின் பொருளா​தா​ரக் கட்​டமைப்பை மேம்​படுத்​தும் மூலதனச் செல​வினங்​களுக்கு அரசு தேவை​யான முன்​னுரிமை​களை அளிக்​கும். இதற்​காக, பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்ட ரூ.12.22 லட்​சம் கோடி நிதியை முழு​மை​யாகப் பயன்​படுத்த வேண்​டும் என்​ப​தில் மத்​திய அரசு உறு​தி​யாக உள்​ளது.

வரும் மாதங்​களில் வரி வரு​வாய் வசூலில் சுணக்​கம் உள்​ளிட்ட பல்​வேறு சவால்​கள் காத்​திருக்​கின்​றன. 2026-27 நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட்​டில் நிதிப் பற்​றாக்​குறை மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 4.3 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், புதிய புள்​ளி​விவரங்​களின்​படி நாமினல் ஜிடிபி திருத்​தப்​பட்​ட​தால், அது தற்​போது 4.5 சதவீத​மாக இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

நிதி நெருக்கடியிலும் மூலதனச் செலவு ரூ.12.22 லட்சம் கோடி இலக்கை எட்டுவதில் மத்திய அரசு உறுதி
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் பஞ்சாப்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in