ஃபிபா தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

ஃபிபா தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்
Updated on
1 min read

சூரிச்: ஃபிபா தரவரிசை​யில் 2025-ம் ஆண்டை ஸ்பெ​யின் அணி முதலிடத்​துடன் நிறைவு செய்​துள்​ளது.

2025-ம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் கால்​பந்து அணி​களின் தரவரிசை பட்​டியலை ஃபிபா வெளி​யிட்​டுள்​ளது. முதல் 10 இடங்​களில் எந்​த​வித மாற்​றம் இல்​லை. ஸ்பெ​யின் அணி 1877.18 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறது.

அர்​ஜெண்​டினா (1873.33), பிரான்ஸ் (1870), இங்​கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்​சுகல் (1760.38), நெதர்​லாந்து (1756.27), பெல்​ஜி​யம் (1730.71), ஜெர்​மனி (1724.15), குரோஷியா (1716.88) ஆகிய அணி​கள் முறையே 2 முதல் 10-வது இடங்​களில் உள்​ளன.

இந்​தியா 1079.52 புள்​ளி​களு​டன் 142-வது இடத்​தில் உள்​ளது. அடுத்த தரவரிசை பட்​டியலில் வரும் ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்​படும் எனவும் ஃபிபா தெரி​வித்​துள்​ளது.

ஃபிபா தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்
விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in