

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று முல்லன்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் ஓபனிங் வீரர்களாக குயின்டன் டிகாக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆடினர். இதில் ரீஸா 8 ரன்களிலேயே வெளியேறினார். மறுமுனையில் ஆடிய டிகாக் 15வது ஓவர் வரை தாக்குப் பிடித்து 90 ரன்கள் விளாசி அசத்தினார்.
அடுத்து இறங்கிய எய்டன் மார்க்ரம் 29 ரன்கள் எடுத்தார். டிவால்ட் ப்ரெவிஸ் 14, டோனோவன் ஃபெரீரா 30, டேவிட் மில்லர் 20 என 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்கள் எடுத்திருந்தது. வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
214 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் ஓபனிங் வீரர்கள் அபிஷேக் சர்மா 17 ரன்கள் , ஷுப்மன் கில் 0 என தொடக்கத்திலேயே இந்திய தடுமாறியது. அக்சர் படேல் 21 ரன்களுடன் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து இறங்கிய திலக் வர்மா அரை சதம் கடந்து 62 ரன்களுடன் அணியின் ஸ்கொரை உயர்த்தினார். கடந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வழங்கிய ஹர்திக் பாண்டியா இந்த முறை 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஜிதேஷ் சர்மா 27, ஷிவம் துபே 1, அர்ஷ்தீப் சிங் 4, வருண் சக்ரவர்த்தி 0, பும்ரா 0 என இந்திய அணி 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.