தென் ஆப்​பி​ரிக்க அணி 494 ரன்கள் குவிப்பு

தென் ஆப்​பி​ரிக்க அணி 494 ரன்கள் குவிப்பு
Updated on: 
1 min read

செஞ்​சுரியன்: வங்​கதேசத்​துக்கு எதிரான 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பி​ரிக்க அணி 7 விக்​கெட் இழப்​புக்கு 494 ரன்​கள் குவித்​துள்​ளது.

செஞ்​சுரியனில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 91 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இதையடுத்து நேற்​றைய 2-ம் நாள் ஆட்​டத்​தில் முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய தென் ஆப்​பி​ரிக்க அணி வீரர்​கள் மார்​கஸ் ஆக்​கர்​மேன் 150, வியான் முல்​டர் 100, டோனி டி ஜோர்ஸி 66 ரன்​கள் சேர்த்து வீழ்ந்​தனர். சைமன் ஹார்​மர் 0, மார்கோ யான்​சன் 67 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

வங்​கதேச அணி தரப்​பில் ஷோரிபுல் இஸ்​லாம், காலித் அகமது ஆகியோர் தலா 2, எபடோத், தஸ்​கின் அகமது, தவ்​ஹித் ஹிரிடோய் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டையும் கைப்​பற்​றினர்.

தென் ஆப்​பி​ரிக்க அணி 494 ரன்கள் குவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

X