ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
Updated on: 
1 min read

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலியா​வுக்கு எதிரான 2-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் ஆட்​டத்​தில் 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் இங்​கிலாந்து அணி அபார வெற்றி பெற்​றது.

இங்​கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்​றுப்​பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்​களில் விளை​யாடி வரு​கிறது. ஒருநாள் தொடரை இங்​கிலாந்து 2-1 என்ற கணக்​கில் கைப்​பற்​றியது. இதையடுத்து 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடர் தற்​போது நடை​பெற்று வரு​கிறது. மெல்​பர்​னில் நடை​பெற்ற முதலா​வது டி20 போட்​டி​யில் ஆஸ்திரேலியா 3 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது.

இந்​நிலை​யில் 2-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்​திலுள்ள கராரா ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 184 ரன்​கள் குவித்​தது. அணி​யில் அதி​கபட்​ச​மாக நிகில் சவுத்ரி 35 பந்​துகளில் 4 பவுண்​டரி, ஒரு சிக்​ஸருடன் 45 ரன்​கள் குவித்​தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஹென்றி குரோகாம்ப், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 185 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் இங்​கிலாந்து அணி பேட்​டிங் செய்​தது. பிலிப் சால்ட் 30 பந்​துகளில் 58 ரன்​களும்(5 பவுண்​டரி, 4 சிக்​ஸர்), அனி​ரின் டொனால்டு 32 பந்​துகளில் 85 ரன்​களும் (4 பவுண்​டரி, 9 சிக்​ஸர்) விளாசி ஆட்​ட​மிழந்​தனர். ஹாரி புரூக் 10, டாம் பேன்​டன் 26 ரன்​களும் சேர்த்தனர்.

13.1 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டுமே இழந்து 188 ரன்​களைக் குவித்து இங்​கிலாந்து வெற்றி பெற்​றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

X