

மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக் போட்டி(பிபிஎல்) நடைபெற்று வருகின்றன. ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்ததால் முன்னணி வீரர்கள் பிபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது.
தற்போது ஆஷஸ் தொடர் நிறைவடைந்து விட்டதால் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக ஸ்மித்தும், பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன் ஆகியோரும் விளையாடவுள்ளனர்.