

மஸ்கட்: ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் இளையோர் ஹாக்கி-5ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
மஸ்கட் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனா 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. சீன அணி தரப்பில் டாங்டாங் லு, கெக்சின் டாங், ஜியாக்சின் குவா, சென் கே ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இந்திய அணி தரப்பில் நவுஷீன் நாஸ், புஷ்பா மஞ்சி ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். வெள்ளி வென்ற இந்திய அணிக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.