

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தியது.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 33 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் (10 பவுண்டரி, 3 சிக்ஸர்) குவித்தார்.
முஷீர் கான் 73, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15, சூர்யகுமார் யாதவ் 24, ஷிவம் துபே 20 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய இமாச்சல் அணி 32.4 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து மும்பை 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.