பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? - சொல்கிறார் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி

இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி

இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி

Updated on
1 min read

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் பாகிஸ்​தான் அணிக்​கெ​தி​ராக 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றியது எப்​படி என்​பது தொடர்​பான விவரங்​களை இந்​திய வீராங்​கனை ஸ்ரீ சரணி பகிர்ந்​துள்​ளார்.

துபா​யில் நடை​பெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இதில் இந்​திய அணி 7 விக்​கெட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்​றது.

முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 55 ரன்​களுக்கு ஆட்​ட​மி​ழந்​தது. இந்​திய அணி தரப்​பில் அபார பந்​து​வீச்சை வெளிப்​படுத்​திய ஸ்ரீ சரணி 7 ரன்​களை விட்​டுக் கொடுத்து 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார்.

பிரேமா ராவத் 9 ரன்​கள் விட்​டுக் கொடுத்து 3 விக்​கெட்​களை​யும், தீப்தி சர்மா 5 ரன்​கள் விட்​டுக் கொடுத்து 2 விக்​கெட்​களை​யும் சாய்த்​தனர். பின்​னர் விளை​யாடிய இந்​திய அணி 8.4 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 57 ரன்​கள் சேர்த்து 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டது. ஆட்​ட​நாயகி​யாக இந்​திய வீராங்​கனை சரணி தேர்வு செய்​யப்​பட்​டார்.

இந்​திய அணி​யின் வெற்றி குறித்து சுழற்​பந்​து ​வீச்​சாளர் ஸ்ரீ சரணி கூறிய​தாவது:

பாகிஸ்​தானுக்கு எதி​ரான போட்​டிக்கு முன்​பாக இந்​திய அணி வீராங்​க​னை​கள் அனை​வ​ரும் ஒன்​றாக உட்​கார்ந்து ஆலோ​சனை செய்​தோம். பிரேமா ராவத், தீப்தி சர்​மா, ராதா யாதவ் என அனை​வ​ரும் ஒன்​றாக அமர்ந்து பாகிஸ்​தான் அணி​யின் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​து​வது தொடர்​பாக விவா​தித்​தோம். நாங்​கள் ஆலோ​சனை செய்த திட்​டங்​களை போட்​டி​யில் அப்​படியே செயல்​படுத்​தினோம். ஆடு​களம் சுழற்​பந்​து​வீச்​சுக்கு உதவும் என்​பதை உணர்ந்​தோம். அதற்​கேற்ப எங்​களது திட்​டங்​களை மிகச் சரி​யாக செயல்​படுத்​தினோம்.

எங்​கள் திட்​டம், களத்​தில் சரி​யாக வேலை செய்​தது. இந்​திய அணி​யின் வெற்​றி​யும் எளி​தானது.

இந்​தப் போட்​டி​யில் நான் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​யது மகிழ்ச்​சி. சக வீராங்​க​னை​களின் ஒத்​துழைப்​பால்​தான் 3 விக்​கெட்​களைக் கைப்​பற்ற முடிந்​தது. இவ்​வாறு ஸ்ரீ சரணி தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p>இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி</p></div>
3 நாடுகள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in