

வின்ட்ஹோயக்: 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி நமீபியாவின் வின்ட்ஹோயக் நகரில் நடைபெற்று வந்தது.
இறுதிச் சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் முன்னேறிய நிலையில் நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்றது.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. ஜோர்டன் ஹெர்மான் 53, எஸ்டர்ஹுய்சன் 32, டெவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் சேர்த்தனர். பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. தென் ஆப்பிரிக்காவின் டூயன் ஜான்சன், ஜான் போர்ட்டுயின் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.