உலகக் கோப்பை தொடக்க விழாவில் ஷகீராவின் ‘டாய் டாய்’ | FIFA WC 2026

உலகக் கோப்பை தொடக்க விழாவில் ஷகீராவின் ‘டாய் டாய்’ | FIFA WC 2026
Updated on
1 min read

மேடை தயார்

காத்திருக்கிறது உலகம் உலகக் கோப்பை என்பது எப்போதும் விளையாட்டைத் தாண்டிய ஒரு அனுபவமாக இருந்துள்ளது. இது தேசிய பெருமையும் உலக ஒற்றுமையும் சந்திக்கும் இடம். சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு சவால் விடும் மேடை. மகிழ்ச்சி, ஏமாற்றம் மற்றும் ஊக்கத்தின் தருணங்களை கோடிக்கணக்கான மக்கள் ஒன்றாக பகிர்ந்து கொள்ளும் விழா.

2026-ல் இந்த உணர்வுகள் அனைத்தும் இன்னும் பெரிய அளவில் வெளிப்படும். இளம் வீரர்கள் வரலாற்றைத் தேடுவார்கள். மூத்த வீரர்கள் கடைசி வெற்றியை நோக்கி போராடுவார்கள். அதன் மத்தியில், யாரும் எதிர்பார்க்காத விஷயங்களை கால்பந்து மீண்டும் உருவாக்கும். மேடை தயார். உலகம் காத்திருக்கிறது.

தொடக்க விழாவில் ஷகீராவின் ‘டாய் டாய்’

உலகக் கோப்பை தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. புகழ்பெற்ற நட்சத்திரங்களான ஷகீரா மற்றும் பர்னா பாய் ஆகியோர் இணைந்து 2026 உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடலான "டாய் டாய்" என்பதை முதல்முறையாக மேடையில் பாடி அரங்கேற்றுகின்றனர். இவர்களுடன் மெக்சிகோ பாப் இசைக்குழுவான 'மனா', ஜே பால்வின், டைலா உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஆப்பிரிக்கா முன்னேறுமா?

2022 கத்தார் உலகக் கோப்பை ஒரு புதிய செய்தியை உலகுக்கு தெரிவித்தது. மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், ஆப்பிரிக்க அணிகள் இனி வெறும் பங்கேற்பாளர்கள் அல்ல, சாம்பியன் பட்டத்துக்கு சவால் விடும் சக்திகளாக மாறியுள்ளன என்பதை நிரூபித்தது. 2026-ல் ஒரு ஆப்பிரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டியை எட்டுமா என்ற கேள்வி கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உலகக் கோப்பை தொடக்க விழாவில் ஷகீராவின் ‘டாய் டாய்’ | FIFA WC 2026
கால்களின் திருவிழா இன்று கோலாகல தொடக்கம் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in