

துபாய்: மகளிர் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் இருதரப்பு டி 20 தொடரின் 2-வது ஆட்டத்தில் ஷபாலி வர்மா 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் அவர், ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அதேவேளையில் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஓர் இடத்தை இழந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர், 2 ஆட்டங்களில் முறையே 13, 12 ரன்களே எடுத்திருந்தார்.
மேற்கு இந்தியத் தீவுகளின் ஹெய்லி மேத்யூஸ் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஜொலித்த இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 இடங்களை இழந்து 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தள்ளப்பட்டுள்ளார். அருந்ததி ரெட்டி 3 இடங்களை இழந்து 12-வது இடத்தை பிடித்துள்ளார்.