

வெலிங்டன்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நியூஸிலாந்து அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை மிட்செல் சான்ட்னர் தலைமையேற்று நடத்திச் செல்வார் என நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அணி விவரம்: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, ஜேக்கப் டப்பி, லாக்கி பெர்குஸன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பர்ட், இஷ் சோதி. மாற்று வீரர்: கைல் ஜேமிசன்.