கண்​ணீர், தியாகங்​கள், நம்பிக்கை... - இந்திய தடகள வீரர் ஜின்சன் ஜான்சன் ஓய்வு

கண்​ணீர், தியாகங்​கள், நம்பிக்கை... - இந்திய தடகள வீரர் ஜின்சன் ஜான்சன் ஓய்வு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய தடகள வீரர் ஜின்​சன் ஜான்​சன் தடகள விளையாட்டு போட்​டிகளில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக நேற்று அறி​வித்​தார்.

இந்​தி​யா​வின் நட்​சத்​திர தடகள வீர​ராக அறியப்​படு​பவர் 34 வயதான ஜின்​சன் ஜான்​சன். இவர் 800 மீட்​டர் மற்​றும் 1,500 மீட்​டர் ஓட்​டப் பந்த​யங்​களில் இந்​தியா சார்​பில் சர்​வ​தேச அளவில் பல்​வேறு போட்​டிகளில் பங்​கேற்​றுள்​ளார்.

குறிப்​பாக கடந்த 2016-ம் ஆண்டு ரியோ​வில் நடை​பெற்ற ஒலிம்​பிக் விளை​யாட்டு போட்​டிகளில் இந்​தியா சார்​பில் பங்​கேற்​றுள்​ளார்.

இது தவிர கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்த்​தா​வில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்டு போட்​டிகளில் 1,500 மீட்​டர் பிரி​வில் பங்​கேற்ற அவர் தங்​கப் பதக்​கத்​தை​யும், 800 மீட்​டர் ஓட்​டப் பந்​த​யத்​தில் வெள்​ளிப் பதக்​கத்​தை​யும் வென்று சாதனை படைத்​திருந்​தார். மேலும் 2023 ஆம் ஆண்டு ஹாங்​சோ​வில் நடை​பெற்ற 1500 மீட்​டர் ஓட்​டத்​தில் வெண்​கலப் பதக்​கத்​தை​யும் வென்​றார்.

இந்​நிலை​யில் தடகளப் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக ஜின்​சன் ஜான்​சன் நேற்று அறி​வித்​தார். இதுகுறித்து அவர் கூறும்​போது, “15 ஆண்​டு​களாக தடகளப் போட்​டிகளில் பங்​கேற்று வந்தேன். கொல்​கத்​தா​வில் முதன்​முதலில் போட்​டி​யில் பங்​கேற்​ற​போது சிறு​வ​னாக இருந்​தேன். ஹாங்​சோ​வில் 2023-ல் பதக்​கம் வென்​ற​போது மகிழ்ச்​சி​யாக இருந்​தது.

சில பயணங்​கள் மீட்​டர்​களி​லும் வினாடிகளி​லும் அளவிடப்​படுகின்றன. சில பயணங்​கள் கண்​ணீர், தியாகங்​கள், நம்​பிக்கை மற்றும் உங்​களை ஒரு​ போதும் கீழே விழ விடாத மனிதர்களால் அளவிடப்​படு​கின்​றன. தற்​போது போட்​டிகளில் இருந்து ஓய்​வு பெறுகிறேன்​” என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in