​மாவோயிஸ்ட் பாதிப்புள்ள தந்தேவாடா பகு​தியை விளையாட்டு மைய​மாக மாற்றிய சச்சின் பவுண்டேஷன்

​மாவோயிஸ்ட் பாதிப்புள்ள தந்தேவாடா பகு​தியை விளையாட்டு மைய​மாக மாற்றிய சச்சின் பவுண்டேஷன்
Updated on
1 min read

தந்​தே​வாடா: சத்​தீஸ்​கர் மாநிலத்​தி​லுள்ள தந்​தே​வாடா மாவட்​ட​மானது மாவோயிஸ்ட் தீவிர​வா​தி​கள் அதி​கம் உள்ள பகு​தி​யாகும். இங்​குள்ள மாவோ​யிஸ்ட்​கள் தங்​களது ஆயுதங்​களை கீழே போட்டு சரண் அடை​யும் மாவோயிஸ்ட்​களுக்கு மறு​வாழ்​வுத் திட்​டத்தை மத்​திய அரசும், சத்​தீஸ்​கர் அரசும் செயல்​படுத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி மாவோ​யிஸ்ட்​கள் இல்​லாத மாநில​மாக சத்​தீஸ்​கரை மத்​திய அரசு அறி​வித்​தது. இந்​நிலை​யில் மான் தேஷி அறக்​கட்​டளை​யும், கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர் பவுண்​டேஷனும் இணைந்து தந்​தே​வா​டா​வில் விளை​யாட்டு மையத்தை உரு​வாக்​கி​யுள்​ளன.

இதற்​காக தந்​தே​வாடா மாவட்​டத்​தில் மட்​டும் 50 பள்​ளிக்​கூடங்​களில் மைதானங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. மைதான் கப் என்ற முன்​னோடித் திட்​டத்​தின் கீழ் இந்த மைதானங்​களை 2 அறக்​கட்​டளை​யும் உரு​வாக்​கி​யுள்​ளது. இதைத் தொடர்ந்து மைதான் கப் திட்​டத்​தின் கீழ் விளை​யாட்​டுப் போட்​டிகள் நடத்​தப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் நேற்று மைதான் கப் திட்ட நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக சத்​தீஸ்​கரிலுள்ள ஜக்​தால்​பூர் விமான​நிலை​யத்​துக்கு சச்​சின் டெண்​டுல்​கர் வந்​தார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஒரு காலத்​தில் சத்​தீஸ்​கரின் தந்​தே​வாடா பகுதி என்​றாலே நினை​வுக்கு வரு​வது மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தினர். ஆனால், இன்று இந்த நிலை மாறி வரு​கிறது.

மான் தேஷி பவுண்​டேஷனும், சச்​சின் டெண்​டுல்​கர் பவுண்​டேஷனும் இணைந்து தற்​போது மைதான் கப் திட்​டத்​தைத் தொடங்கி உள்​ளோம். இங்கு 50 பள்​ளிக்​கூட மைதானங்​களை மைதான் கப் திட்​டத்​தின் கீழ் உரு​வாக்​கி​யுள்​ளோம் என்​ப​தில் மிக​வும் மகிழ்ச்சி அடைகிறோம். தந்​தே​வா​டா​வில் மைதான் கப் போட்​டிகள் நடை​பெற்று வருகின்றன. மாவோ​யிஸ்ட் பாதித்த இந்த மாவட்​டத்​தில், விளை​யாட்டை ஊக்​குவிக்க வேண்​டும் என்ற நோக்​கில்​தான் கடந்த ஆண்டு இந்​தத் திட்​டத்​தைத் தொடங்​கினோம்.

மான் தேஷி அறக்​கட்​டளை​யுடன் இணைந்து எங்​களது (சச்​சின்) அறக்​கட்​டளை இங்கு சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​வது மிக​வும் மகிழ்ச்​சி​யளிக்​கிறது. கபடி, கோ-கோ, தடகளம், வாலி​பால் போன்ற விளை​யாட்​டுப் போட்​டிகள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு சச்​சின் தெரி​வித்​தார்.

​மாவோயிஸ்ட் பாதிப்புள்ள தந்தேவாடா பகு​தியை விளையாட்டு மைய​மாக மாற்றிய சச்சின் பவுண்டேஷன்
மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் - 152 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப் பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in