பிரிஸ்பன் டென்னிஸ் இறுதி சுற்றில் சபலென்கா

பிரிஸ்பன் டென்னிஸ் இறுதி சுற்றில் சபலென்கா
Updated on
1 min read

பிரிஸ்பன்: ஆஸ்​திரேலி​யா​வின் பிரிஸ்​பன் நகரில் பிரிஸ்​பன் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் அரை இறு​தி​யில் முதல் நிலை வீராங்கனை​யும், நடப்பு சாம்​பியனு​மான பெலாரஸின் அரினா சபலென்​கா, 11-ம் நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் கரோலினா முச்​சோ​வாவுடன் மோதி​னார். இதில் சபலென்கா 6- 3, 6- 4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

இந்​தத் தொடரில் சபலென்கா தொடர்ச்​சி​யாக 3-வது ஆண்​டாக இறு​திப் போட்​டி​யில் விளை​யாட உள்​ளார். இறு​திப் போட்​டி​யில் அவர், 16-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்டா கோஸ்ட்​யுக்​குடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். மார்டா கோஸ்ட்​யுக் அரை இறு​தி​யில் 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வீழ்த்​தி​னார்.

பிரிஸ்பன் டென்னிஸ் இறுதி சுற்றில் சபலென்கா
மும்பை, நாக்பூரில் 58 பாஜக நிர்வாகிகள் இடைநீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in