

மும்பை: மகாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தல், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மகாயுதி வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்க தவறியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 58 நிர்வாகிகளை பாஜக 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.
இவர்களில் முன்னாள் மேயர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் அடங்குவர். இந்த 58 பேரில் 26 பேர் மும்பையையும் 32 பேர் நாக்பூரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.