இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு - பிசிசிஐ பகிர்ந்து அளிப்பது எப்படி?

இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு - பிசிசிஐ பகிர்ந்து அளிப்பது எப்படி?
Updated on
1 min read

புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​படும் என பிசிசிஐ அறிவித்​துள்​ளது.

அகம​தா​பாத்​தில் கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் நியூஸிலாந்தை 96 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​திருந்​தது.

இந்நிலை​யில் இந்​திய அணி​யில் இடம் பெற்​றிருந்த 15 வீரர்கள், பயிற்​சி​யாளர் மற்​றும் உதவி பயிற்​சி​யாளர் ஆகியோ​ருக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​படும் என பிசிசிஐ அறி​வித்​துள்​ளது.

கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலை​மை​யில் இந்​திய அணி வென்​றிருந்​தது. அப்​போது இந்​திய அணிக்கு ரூ.125 கோடியை பரி​சாக பிசிசிஐ வழங்​கி​யிருந்​தது. அதில் தற்போது ரூ.6 கோடி அதி​க​மாக ரூ.131 கோடி தொகையை சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான அணிக்கு வழங்கப்பட உள்​ளது.

பிசிசிஐ வட்​டாரங்​களின்​படி அணி​யில் உள்ள 15 வீரர்களுக்கும் தலா ரூ.6 கோடி வழங்​கப்​படக்​கூடும். மீதம் உள்ள ரூ.41 கோடி பயிற்​சி​யார் மற்​றும் உதவி பயிற்​சி​யாளர்​களை உள்​ளடக்​கிய குழு​வுக்கு வழங்​கப்​படும் என கூறப்​படு​கிறது.

பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில்​,“இந்த வரலாற்​றுச் சாதனைக்​காக இந்​திய அணி வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள், மற்​றும் தேர்​வாளர்​களை வாரி​யம் மீண்​டும் ஒரு​முறை பாராட்​டு​கிறோம். அவர்​கள் எதிர்​காலத்​தி​லும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறோம்” என கூறப்​பட்​டுள்​ளது.

இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு - பிசிசிஐ பகிர்ந்து அளிப்பது எப்படி?
12 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி-யாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in