12 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி-யாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

12 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி-யாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் 12 காவல் ஆய்வாளர்களுக்குக் துணை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்காலிக டிஎஸ்பி-க்களாக நியமிக்கப்பட்டிருந்த 12 ஆய்வாளர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம் 2016-ன் பிரிவு 17-ன் கீழ் இந்தப் பதவி உயர்வு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்

சி. இளவரசு - தென்காசி மாவட்டக் குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.

பி. காந்தி - கன்னியாகுமரி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.

ஆர். சகாய அன்பரசு - ராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.

எம். ரவீந்திரன் - சேலம் சிறப்புப் பிரிவு நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி.

ஆர். செந்தில்குமார் - மதுரை உயர் நீதிமன்றப் பாதுகாப்பு உதவி ஆணையர்.

எம். அறிவழகன் - நாகப்பட்டினம் மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

எஸ். திருஞானசம்பந்தன் - திருப்பூர் மாவட்டக் குற்றப் பிரிவு-II டி.எஸ்.பி.

கே. கபிலன் - சேலம் மாவட்டக் குற்றப் பிரிவு-II டி.எஸ்.பி.

எஸ். ரவிச்சந்திரன் - பெரம்பலூர் உட்கோட்ட டி.எஸ்.பி.

ஆர். செந்தில்குமார் - கரூர் மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

ஜே. ரமேஷ் - ஆவடி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர்.

எம். கண்ணன் - தூத்துக்குடி மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

12 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி-யாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
ஈரான் போர் எதிரொலி: ஏர் இந்தியா விமான கட்டணம் உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in