ரூட், புரூக் கூட்டணியால் இங்கிலாந்து ஆதிக்கம்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - சிட்னி டெஸ்ட்

ரூட், புரூக் கூட்டணியால் இங்கிலாந்து ஆதிக்கம்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - சிட்னி டெஸ்ட்
Updated on
1 min read

சிட்னி: இங்​கிலாந்​து, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதும் 5-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்​தில் தொடங்கியது. 4-வது போட்​டி​யில் பெற்ற வெற்​றியைத் தொடரும் உற்​சாகத்​தில் இங்​கிலாந்து இதில் களமிறங்கியது.

நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்​டிகளில் ஆஸ்​திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றி​விட்​டது. இந்​நிலை​யில், மெல்​பர்​னில் நடந்த 4-வது டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து வெற்றி பெற்​றது. மெல்​பர்​னில் நடந்த முந்​தைய டெஸ்ட் போட்டி 2 நாட்​களி​லேயே முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்தப் போட்டியின் முதல் செஷனில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.

அப்போது 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி, அபார கூட்டணி அமைத்தது. 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த அவர்கள் உதவினர். ரூட் - 72 மற்றும் புரூக் - 78 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை, மழை உள்ளிட்ட வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், போலண்ட் மற்றும் நேசர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

ரூட், புரூக் கூட்டணியால் இங்கிலாந்து ஆதிக்கம்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - சிட்னி டெஸ்ட்
“இது அண்ணன் - தம்பி பொங்கல்”: விஜய் உடனான போட்டிக்கு சிவகார்த்திகேயன் பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in