கால்​பந்து போட்டிகளில் 1,000 கோல்கள்: போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ இலக்கு

கால்​பந்து போட்டிகளில் 1,000 கோல்கள்: போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ இலக்கு
Updated on
1 min read

துபாய்: தனது கால்​பந்து வாழ்க்​கை​யில் 1,000 கோல்​களை அடிக்க வேண்​டும் என்று விரும்​புவ​தாக போர்ச்​சுகல் அணி வீரரும், கால்​பந்து ஜாம்​ப​வானு​மான கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ தெரிவித்தார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் நேற்று முன்​தினம் குளோப் கால்​பந்து வீரர்​கள் வழங்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் மத்​திய கிழக்கு நாடு​கள் பிரி​விலிருந்து சிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார்.

விழாவுக்கு பின்​னர் அவர் கூறிய​தாவது: "எனக்கு தற்​போது 40 வயதாகிறது. கால்​பந்​துப் போட்​டிகளில் 1,000 கோல்​களை அடிக்க வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். நேற்று முன்​தினம் சவுதி புரோ லீக் போட்​டி​யில் அல்​-ந​சார் அணிக்​காக 2 கோல்​களை அடித்​தேன். இதன்​மூலம் எனது கோல்​களின் எண்​ணிக்கை 956-ஆக உயர்ந்துள்​ளன.

எனவே, விரை​வில் 1,000 கோல்​களை அடித்து விடு​வேன் என்ற நம்பிக்கை இருக்​கிறது. அது​வரை எனக்கு எந்​தக் காய​மும் ஏற்படாமல் இருக்​க வேண்​டும். அப்​படி நடந்​தால் 1,000 கோல்​கள் என்ற இலக்கை விரை​வில் எட்டி விடு​வேன். நான் தொடர்ந்து கால்பந்துப் போட்​டிகளில் விளை​யாட விரும்​பு​கிறேன். இதற்காகவே என்னை நானே ஊக்​கப்​படுத்​திக் கொண்டு வருகிறேன்.

மத்​திய கிழக்கு நாடு​கள் என எங்கு விளை​யாடு​கிறேன் என்​பது முக்​கியமல்ல. தொடர்ந்து கால்​பந்து விளையாடி விளை​யாட்டை அனுபவிக்க வேண்​டும். கோப்​பைகளை வெல்​ல​ வேண்​டும். கோல்களின் எண்​ணிக்​கையை உயர்த்த வேண்​டும் என்​பது​தான் இலக்​கு. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அடுத்த ஆண்டு அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்​துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்​தப் போட்​டி​யில் கலந்​து​கொள்​ளும் போர்ச்சுகல் அணிக்கு கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ கேப்டனாக பொறுப்​பேற்​பார் எனத் தெரி​கிறது. இது​வரை அவர் 5 உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டிகளில் விளை​யாடி​யுள்​ளார்.

இது​வரை அவர் போர்​ச்சு​கல் அணி மட்​டுமல்​லாமல் ரியல்மாட்​ரிட், மான்​செஸ்​டர் யுனைடெட், ஜுவென்​டஸ் அணி​களுக்​காக​வும் விளை​யாடி​யுள்​ளார். தற்​போது அல் நசார் அணிக்​காக ரொனால்டோ விளை​யாடி வரு​கிறார்.

கால்​பந்து போட்டிகளில் 1,000 கோல்கள்: போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ இலக்கு
பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in