ஓய்வறை விவகாரம் கசிந்தது தொடர்பாக ரிஸ்வான், இமாம் உல் ஹக்கிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை

வங்கி கணக்குகள், நிதி பரிவர்த்தனைகளும் ஆய்வு
ரிஸ்வான், இமாம் உல் ஹக்

ரிஸ்வான், இமாம் உல் ஹக்

Updated on
2 min read

லாகூர்: இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தின் போது ஓய்​வறை விவ​காரங்​கள் வெளியே கசிந்​தது தொடர்​பாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் சீனியர் வீரர்​களான முகமது ரிஸ்​வான், இமாம் உல் ஹக் ஆகியோரிடம் பாகிஸ்​தானின் தேசிய சைபர் கிரைம் புல​னாய்வு நிறு​வனம் 4 மணி நேரம் விசா​ரணை நடத்​தி​யது.

பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. அந்த அணிக்கு எதி​ரான முதல் 2 டெஸ்ட் போட்​டிகளி​லும் பாகிஸ்​தான் அணி படு​தோல்வி அடைந்​தது. இதையடுத்து சீனியர் வீரர்​களான முகமது ரிஸ்​வான், இமாம் உல் ஹக் உள்​ளிட்ட 7 வீரர்​களை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் அணி​யில் இருந்து அதிரடி​யாக நீக்​கியது. மேலும் அவர்​களு​டன் உதவி பயிற்​சி​யாளர்​கள் இரு​வரும் உடனடி​யாக பாகிஸ்​தானுக்கு வரவழைக்​கப்​பட்​டனர்.

இவர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் இதுதொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது. அணி​யில் இருந்து நீக்​கப்​பட்ட உடன் முகமது ரிஸ்​வான், இமாம் உல் ஹக் ஆகியோரது செல்​போன்​களை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​தின் பாது​காப்பு அதி​காரி​கள் பறி​முதல் செய்து இருந்​தனர். இந்த போன்​களை அவர்​கள், பாகிஸ்​தானின் தேசிய சைபர் கிரைம் புல​னாய்வு நிறு​வனத்​திடம் வழங்​கியதுடன் வீரர்​கள் இரு​வர் மீதும் புகார் அளித்​தனர்.

அந்த புகாரில் ஓய்​வறை ரகசி​யங்​களை வெளியே கசி​ய​விட்​டது தொடர்​பாக​வும், வீரர்​களின் வங்கி கணக்கு பரிவர்த்​தனை தொடர்​பாக​வும் விசா​ரணை நடத்த வலி​யுறுத்​தப்​பட்​டிருந்​ததாக கூறப்​படு​கிறது. பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​தின் தலை​வ​ரான மோஷின் நக்​வி, அந்​நாட்​டின் உள்​துறை அமைச்​ச​ராக​வும் உள்​ளார். இவரது அமைச்​சகத்​தின் கீழ்​தான் புல​னாய்வு நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது.

இந்த விசா​ரணையை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​தின் செய்​தித் தொடர்​பாள​ரும் உறு​திப்​படுத்தி உள்​ளார். தேசிய அணி வீரர்​கள் மீது, கிரிக்​கெட் வாரி​யம் சைபர் கிரைம் புல​னாய்வு அமைப்​பிடம் புகார் தெரி​விப்​பது இதுவே முதன்​முறை​யாகும்.

இந்​நிலை​யில் தேசிய சைபர் கிரைம் புல​னாய்வு நிறு​வனம் முன்பு விசா​ரணைக்கு ஆஜராகும்​படி ரிஸ்​வான், இமாம் உல் ஹக் ஆகியோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​தது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் லாகூர் ஜோஹர் டவுனில் உள்ள சைபர் கிரைம் புல​னாய்வு அலு​வல​கத்​தில் ரிஸ்​வானும், இமாம் உல் ஹக்​கும் ஆஜராகினர். அவர்​களிடம் சுமார் 4 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. விசா​ரணை​யின் போது எழுப்​பப்பட்ட கேள்வி​களுக்கு எழுத்​துப்​பூர்​வ​மான பதில்​களைச் சமர்ப்​பிக்க வீரர்​கள் இரு​வரும் கூடு​தல் அவகாசம் கோரினர்.

இங்​கிலாந்​தில் நடை​பெற்ற பயிற்சி அமர்​வு​கள் மற்​றும் போட்​டி​யின் போது அவர்​கள் தொடர்பு கொண்ட நபர்​கள் மற்​றும் சந்​திப்​பு​கள் குறித்​தும், ஓய்​வறை ரகசி​யங்​கள் கசிவு குறித்​தும் இரு வீரர்​களிட​மும் கேள்வி எழுப்​பப்​பட்​ட​தாக புல​னாய்வு விசா​ரணை வட்டாரங்​கள் தெரி​வித்​தன.

இதற்​கிடையே பாகிஸ்​தானின் ஜியோ நியூஸ் தொலைக்​காட்​சி, பாகிஸ்​தான் வீரர்​களிடம் நடத்​தப்​பட்டு வரும் விசா​ரணை குறித்து பல்​வேறு தகவல்​களை வெளி​யிட்​டுள்​ளது. இரண்டு வீரர்​களின் மொபைல் போன்​கள் தடய​வியல் மற்​றும் தொழில்​நுட்ப பகுப்​பாய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக அவர்​களின் நிதி கணக்​கு​கள் மற்​றும் சந்​தேகத்​துக்​கு​ இட​மான பரிவர்த்​தனை​கள் மீது கவனம் செலுத்​தப்​பட்​டுள்​ளது.

இங்​கிலாந்​துக்கு எதி​ரான தற்​போதைய டெஸ்ட் தொடருக்கு முன்​னும் பின்​னும் ரிஸ்​வான் மற்​றும் இமாம் உல் ஹக்​கின் நிதி பரிவர்த்​தனை​கள் ஆராயப்​பட்டு வரு​வ​தாக​வும், அவர்​களின் வங்​கிக் கணக்கு விவரங்​கள் தீவிர பரிசீலனை​யில் இருப்​ப​தாக​வும் அந்​தத் தொலைக்​காட்சி தெரி​வித்​துள்​ளது.

விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக, ஏதேனும் நிறு​வனம், தனி​நபர் அல்​லது அமைப்​பு​களால் நிதி கொடுக்​கப்​பட்​டுள்​ளதா என்​பது குறித்து ஆராயப்​பட்டு வரு​வதுடன், சம்​பந்​தப்​பட்ட காலத்​தில் வீரர்​களின் கணக்​கு​கள் மூலம் செய்​யப்​பட்​ட சில பரிவர்த்​தனை​களும்​ மறுஆய்​வு செய்​யப்​பட்​டு வருகின்​றன.

<div class="paragraphs"><p>ரிஸ்வான், இமாம் உல் ஹக்</p></div>
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in