

மோகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான அரை இறுதி போட்டியில் நேற்று நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் அன்மோல் ஏக்கா 2 கோல்களும் (16 மற்றும் 51-வது நிமிடங்கள்) சுக்விந்தர் ஒரு கோலும் (51-வது நிமிடம்) அடித்து அசத்தினர்.
இந்த 3 கோல்களும் பீல்டு கோலாக அமைந்திருந்தது. மலேசியா அணி சார்பில் 60-வது நிமிடத்தில் ராகுல் கோல் அடித்தார்.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் தென் கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நாளை (13-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.