

ரிஷப் பந்த்
கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில், வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடித்தார் இந்திய அணி யின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்.
இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை ரிஷப் பந்த் 89 சிக்ஸர்கள் விளாசி உள்ளார்.
இதற்கு முன்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 88 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அவர் 64 டெஸ்ட் போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இந்த சாதனையை தற்போது 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முறியடித்துள்ளார் ரிஷப் பந்த்.