ரன்வேட்டைக்கு ரிஷப் பந்த் தயார் - லக்னோ அணி எப்படி? | ஐபிஎல் 2026 விரைவுப் பார்வை

ரன்வேட்டைக்கு ரிஷப் பந்த் தயார் - லக்னோ அணி எப்படி? | ஐபிஎல் 2026 விரைவுப் பார்வை
Updated on
1 min read

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடந்த 2023-ம் சீசனில் எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்ததில் இருந்து பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. அந்த அணி கடந்த ஆண்டு 7-வது இடத்தையே பிடித்திருந்தது. ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த், உயர் மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியிருந்தார். ஆனால், இந்த சீசனுக்கு முன்னதாக அவர், சில சாதகமான மாற்றங்களுடன் களமிறங்குகிறார்.

இம்முறை பந்துவீச்சை வலுப்படுத்துவதிலும், நடுவரிசை பேட்டிங்கை சீரமைப்பதிலும் அந்த அணி அதிக கவனம் செலுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு லக்னோ அணி கேன் வில்லியம்சனை வியூக ஆலோசகராக நியமித்துள்ளது. இது ரிஷப் பந்ந்தின் கேப்டன்சி அழுத்தத்தைக் குறைத்து, அவரை சுதந்திரமாக பேட்டிங் செய்ய உதவக்கூடும்.

பலம்: எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது அதிரடி பேட்டிங். முகமது ஷமி, அன்ரிச் நோர்க்கியா, மயங்க் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணி முத்திரை பதிக்கக்கூடும்.

பலவீனம்: பிரதான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. இலங்கையின் வனிந்து ஹசரங்கா இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. லெக்-ஸ்பின்னர் திக்வேஷ் ராதி, கடந்த ஆண்டு தனது அறிமுக தொடரில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓரளவுக்குச் சிறப்பாக செயல்பட்டார். ஓவருக்கு சராசரியாக 8 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் அவர், விக்கெட் கொண்டாட்டத்துக்காக செய்யும் ‘நோட்புக் செலிபிரேஷன்’ சர்ச்சையாகி இருந்தது.

அணி விவரம்:

பேட்ஸ்மேன்கள்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஜோஷ் இங்லிஷ், எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், அப்துல் சமத், ஆயுஷ் பதோனி, மேத்யூ ப்ரீட்ஸ்கே, முகுல் சவுத்ரி, ஹிமாத் சிங், அக் ஷத் ரகுவன்ஷி.

ஆல்ரவுண்டர்கள்: வனிந்து ஹசரங்கா, அர்ஷின் குல்கர்னி, மிட்செல் மார்ஷ், ஷாபாஷ் அகமது.

பந்துவீச்சாளர்கள்: அவேஷ் கான், முகமது ஷமி, ஆகாஷ் சிங், மோஷின் கான், அன்ரிச் நோர்க்கியா, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ராதி, மணிமாறன் சித்தார்த், அர்ஜூன் டெண்டுல்கர், நமன் திவாரி, மயங்க் யாதவ்.

செயல் திறன்

மொத்த ஆட்டங்கள்: 60

வெற்றி: 34

தோல்வி: 26

வெற்றி சதவிகிதம்: 57%

ரன்வேட்டைக்கு ரிஷப் பந்த் தயார் - லக்னோ அணி எப்படி? | ஐபிஎல் 2026 விரைவுப் பார்வை
அதிருப்தியில் குமுறும் கூட்டணிக் கட்சிகள்: தேர்தலில் திமுகவுக்கு சிக்கலை உருவாக்குமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in