

சிங்கப்பூர்: பிஎஸ்ஏ சிங்கப்பூர் சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஓம் செம்வால், இங்கிலாந்தின் ஜேம்ஸ் பீச்சுடன் மோதினார்.
இதில் ஜேம்ஸ் பீச் 7-11, 11-6, 7-11, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரரான சந்தேஷ் ரவிகுமார் 9-11, 11-5, 7-11, 9-11. என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் ஜியோங்மின் ரியூவிடம் தோல்வி அடைந்தார்.
மகளிர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ராதிகா சீலன், மலேசியாவின் யி ஜி சென்-ஐ எதிர்த்து விளையாடினார். இதில் யி ஜி சென் 11-7, 12-10, 9-11, 11-0 என்ற செட் கணக்கில் ராதிகா சீலனை தோற்கடித்தார்.