தாதா ஜோபன் பில்லாவை இந்தியா கொண்டு வந்த போலீஸ்

தாதா ஜோபன் பில்லாவை இந்தியா கொண்டு வந்த போலீஸ்
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்சாபில் 4 கொலை வழக்குகள் உட்பட பல கடும் குற்றவழக்குகளில் ஜோபன்ஜித் சிங் (எ) ஜோபன் பில்லா தேடப்பட்டு வந்தார். கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளும் இவர் மீதுள்ளன.

இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெவ்வேறு நாடுகளில் இருந்து செயல்பட்டதன் மூலம் இவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி வந்தார். இதையடுத்து ஜோபன் பில்லாவை பஞ்சாப் போலீஸார் தேடி வந்தனர்.

சர்வதேச அளவில் 6 மாத தேடலுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் ஜோபன் பில்லா, ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு பாது காப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தாதா ஜோபன் பில்லாவை இந்தியா கொண்டு வந்த போலீஸ்
மாணவிக்கு பாலியல் தொல்லை: மே.வங்க விரிவுரையாளர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in