

சிட்னி: டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தின் சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.
சிட்னியில் நேற்று நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்டார்க் மொத்தம் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர் என்ற ரங்கனா ஹெராத்தின் சாதனையை, மிட்செல் ஸ்டார்க் தற்போது சமன் செய்துள்ளார்.
93 டெஸ்ட் போட்டிகளில் ஹெராத் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், ஸ்டார்க் 106 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 433 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.