

சென்னை: 75-வது சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஆடவர் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - இந்தியன் ரயில்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே அணி 77-69 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியன் ரயில்வே அணி சார்பில் அரவிந்தர் சிங் 18 புள்ளிகளை சேர்த்தார். கன்வார் குர்பாஸ் சிங் சாந்து, சஹாய்ஜ் பிரதாப் சிங் செகோன் ஆகியோர் தலா 14 புள்ளிகளை எடுத்தனர். மகளிர் பிரிவிலும் இந்தியன் ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் 75-66 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.