“ரஹானே கேப்டன்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை” - ஹர்பஜன் சிங்

“ரஹானே கேப்டன்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை” - ஹர்பஜன் சிங்
Updated on
1 min read

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் அஜிங்கிய ரஹானேயின் கேப்டன்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

பவர் ப்ளே நேரத்தில் ரோஹித் சர்மா கிரீசில் இருந்த போது சுனில் நரைனுக்கு ஓரு ஓவராவது கொடுத்துப் பார்த்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.

221 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கு, தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா (38 பந்துகளில் 78) மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கிள்டன் (43 பந்துகளில் 81) அதிரடி ஆட்டம் காட்டினர். இருவரும் சேர்ந்து 71 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். மும்பை அணி 19.1 ஓவர்களில் 224/4 என இலக்கை எட்டியது.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

“பவர்ப்ளேவில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஓவர்களாவது சுனில் நரேனைப் பந்து வீச வைத்திருக்க வேண்டும். அதுவே ரோஹித் சர்மா விக்கெட்டை விரைவில் எடுக்க சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் முழு ஓவர்களையும் கூட வீசவில்லை. இதனால் கேப்டன்சி சரியாக இல்லை என்பது தெளிவாகிறது.

ஆனால் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கிள்டன் இருவரும் அபாரமாக ஆடினர். அவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. இருப்பினும் கொல்கத்தா கேப்டன் ரஹானே அந்தச் சூழ்நிலையை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும். ரஹானே கேப்டன்சி அத்தருணத்தில் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.” என்றார் ஹர்பஜன் சிங்.

“ரஹானே கேப்டன்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை” - ஹர்பஜன் சிங்
பிட்ச் ஒன்றுதான்.. திறமைகள் வேறு - சிஎஸ்கே பவுலிங்கை நொறுக்கிய வைபவ் சூரியவன்ஷி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in