

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ஸ்ரீதர், இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
ஸ்ரீதர் கடந்த 2014 முதல் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். 300 ஆட்டங்களில் அவர், பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் 10 நாள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமில் ஸ்ரீதர் பங்கேற்று இலங்கை வீரர்களுக்கு பீல்டிங் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.