

பி.வி. சிந்து
புதுடெல்லி: மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 முறை பதக்கம் வென்றவர் பி.வி. சிந்து. தொடர்ந்து பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று வரும் பி.வி. சிந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சர்வதேச சர்க்யூட் பாட்மிண்டன் போட்டியில் விளையாடினார். அப்போது காயம் அடைந்ததால் அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் மலேசியாவில் இன்று தொடங்கும் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் அவர் களமிறங்கவுள்ளார். கோலாலம்பூரிலுள்ள அக்ஸியாட்டா அரேனா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.