அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்: வேட்பாளர் தேர்வுக்குழு தலைவர் பிரியங்கா

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

Updated on
1 min read

புதுடெல்லி: அசாமில் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்பு வரை காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​தது. இன்று பிர​தான எதிர்க்​கட்​சி​யாக உள்​ளது.

இச்​சூழலில் வரும் ஏப்​ரல், மே மாதங்​களில் அசாம் சட்​டப்​பேர​வைக்​கு தேர்​தல் நடை​பெற உள்​ளது. அசாமை மீண்​டும் கைப்​பற்ற காங்​கிரஸ் முன்​கூட்​டியே தயா​ராகி வரு​கிறது. இதற்​கான முக்​கியப் பொறுப்பை மக்​களவை எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​விடம் காங்​கிரஸ் அளித்​துள்​ளது. அசாமின் வேட்​பாளர் தேர்​வுக்​குழு தலை​வ​ராக அவர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

கடந்த மக்​களவை தேர்​தலுக்கு முன் 2019-ல் அதி​காரப்​பூர்​வ​மாக கட்​சி​யில் இணைந்​தார் பிரி​யங்​கா. அப்​போது முதல் அவருக்கு முக்​கியப் பொறுப்​பு​கள் வழங்​கப்பட வேண்​டும் என காங்​கிரஸார் விரும்​பினர். இந்​நிலை​யில் இப்​பு​திய நியமனம் மூலம் கட்​சி​யின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்​றப்​பட்டு உள்​ள​தாக​வும் கருதப்​படு​கிறது.

பிரி​யங்​கா, கடந்த 2024 நவம்​பரில் வயநாடு இடைத்​தேர்​தல் மூலம் முதல்​முறை​யாக மக்​களவைக்​குள் நுழைந்​தார். இவர் தனது சகோ​தரர் ராகுலை விட அதிக அரசி​யல் அனுபவம் கொண்​ட​வர். 2004-ல் ராகுல் மக்​களவைக்கு போட்​டி​யிட்டு தீவிர அரசி​யலில் நுழைந்தார். ஆனால் அவருக்கு முன்​பாகவே பிரி​யங்கா தன் தாயான சோனியாவின் தேர்​தல் பிரச்​சா​ரங்​களை வழிநடத்தி வந்​தார். பாட்டி இந்​திரா காந்​தி​யுடன் ஒப்​பிடப்​படும் பிரி​யங்​கா, கட்​சி​யின் முழுப் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டால், காங்கிரஸை மீண்​டும் பலப்​படுத்த முடி​யும் என்ற நம்​பிக்கை கொண்​ட​வர்​களும் கட்​சி​யில் உள்​ளனர்.

கடந்த 2019 மக்​கள​வைத் தேர்​தலுக்கு முன் பிரி​யங்கா உ.பி. பொதுச் செய​லா​ள​ராக நியமிக்​கப்​பட்​டு, கிழக்கு உ.பி. தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு பொறுப்​பேற்​றிருந்​தார். எனினும் இதற்கு போதிய பலன் கிடைக்​க​வில்​லை.

உ.பி.யை விட அசாமில் காங்​கிரஸ் வலு​வாக உள்​ளது. வேட்​பாளர்​களை தேர்ந்​தெடுப்​பதே வேட்​பாளர் தேர்​வுக் குழு​வின் பணி. இருப்​பினும், பிரி​யங்​கா​வின் பங்கு அதை விட அதி​க​மாக இருக்​கும் எனக் கருதப்​படு​கிறது.

அசாமில் காங்​கிரஸ் தலை​மை​யில் எதிர்க்​கட்சி கூட்​டணி அமைய உள்​ளது. இங்கு பிஹாரில் ஏற்​பட்​டதைப் போன்ற குழப்​பங்​கள் ஏற்​படக்​கூ​டாது என கட்​சித் தலைமை கருதுகிறது. இதற்கு ராகுலை விட பிரி​யங்​காவே பொருத்​த​மானவர் என நம்பி அவருக்​கு முக்​கியப்​ பொறுப்​பை அளித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>பிரியங்கா காந்தி</p></div>
உலகில் முதல் முறையாக பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் இன்ஜின்: சென்னை ஐஐடியுடன் இணைந்து ராணுவம் சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in