

கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிழியை எதிர்த்து விளையாடினார்.
இதில் சிந்து 16-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 2-வது செட்டில் சிந்து ஒரு கட்டத்தில் 11-6 என முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக செய்த தவறுகளால் சிந்து தோல்வியை சந்திக்க நேரிட்டது.