மலேசிய ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து

மலேசிய ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து
Updated on
1 min read

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்​மிண்​டன் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறு​திக்கு இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து முன்​னேறி​யுள்​ளார். மலேசி​யா​வின் கோலாலம்​பூரில் இப்​போட்டி நடைபெற்று வரு​கிறது.

நேற்று நடை​பெற்ற 2-வது சுற்​றுப் போட்​டி​யில் முன்​னாள் உலக சாம்​பிய​னான பி.​வி. சிந்து 21-8, 21-13 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ஜப்​பான் வீராங்​கனை டொமாகோ மியா​சாக்​கியை வீழ்த்தி கால் இறு​திக்கு முன்​னேறி​யுள்​ளார்.

ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாத்விக்​சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-15 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சீன தைபே​வின் யாங் போ சுவான், லீ ஜே ஹுவே ஜோடியை வீழ்த்தி கால்​ இறு​திக்​கு முன்னேறியது.

மலேசிய ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து
‘குட் பை பாஸ்பால்’- சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்தை ஊதி ஆஷஸ் தொடரை 4-1 என்று வென்றது ஆஸ்திரேலியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in