ஜப்பான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து முன்னேற்றம்

ஜப்பான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து முன்னேற்றம்
Updated on
1 min read

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் 37-வது இடத்​தில் உள்ள மலேசி​யா​வின் வாங் லிங்ஷிங்கை வீழ்த்​தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற செட் கணக்​கில் ஸ்காட்​லாந்​தின் அலெக்​ஸாண்​டர் துன், ஜூலி மேக்​பேர்​சன் ஜோடியை வீழ்த்​தி​யது. ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கா​யம் காரண​மாக வில​கியது.

ஜப்பான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து முன்னேற்றம்
‘அதிரடி’ தவிர்த்து ‘நிதானம்’ காட்டும் அண்ணாமலை - ‘இலக்கு 2031’ நகர்வுகள் எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in