விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் அரை இறுதியில் பஞ்சாப், விதர்பா அணிகள்

பிரப்​சிம்​ரன் சிங்

பிரப்​சிம்​ரன் சிங்

Updated on
1 min read

பெங்களூரு: ​விஜய் ஹசாரே ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் பஞ்​சாப், விதர்பா அணி​கள் அரை இறு​திக்கு முன்னேறின.

விஜய் ஹசாரே ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் கால் இறுதி ஆட்​டத்​தில் நேற்று பெங்​களூரு​ பிசிசிஐ சிறப்பு மையத்​தில் உள்ள ஆடு​களத்​தில் பஞ்​சாப் - மத்​திய பிரதேசம் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்​சாப் அணி 50 ஓவர்​களில் 6 விக்கெட்​கள் இழப்​புக்கு 345 ரன்​கள் குவித்​தது.

கேப்​டன் பிரப்​சிம்​ரன் சிங் 86 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்டரி​களு​டன் 88 ரன்​களும், அன்​மோல்​பிரீத் சிங் 62 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் விளாசினர். நேஹல் வதேரா 56, ஹர்​னூர் சிங் 51 ரன்​கள் சேர்த்தனர்.

மத்​திய பிரதேச அணி தரப்​பில் திரிபுரேஷ் சிங், வெங்​கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 346 ரன்​கள் இலக்குடன் பேட் செய்த மத்​திய பிரதேச அணி 31.2 ஓவர்​களில் 162 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக ரஜத் பட்​டி​தார் 38, திரிபுரேஷ் சிங் 31, ஷுபம் சர்மா 24, ஹிமான்ஷு மந்த்ரி 18 ரன்​கள் சேர்த்​தனர். பஞ்​சாப் அணி சார்​பில் சன்​வீர் சிங் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். குர்​னூர் பிரார், கிரிஷ் பகத், ரமன்​தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 183 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பஞ்​சாப் அணி அரை இறு​திக்கு முன்​னேறியது. ஆட்ட நாயக​னாக பிரப்​சிம்​ரன் சிங் தேர்​வா​னார்.

டெல்லி அணி தோல்வி: மற்​றொரு கால் இறுதி ஆட்​டத்​தில் விதர்பா - டெல்லி அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த விதர்பா அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 300 ரன்கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக யாஷ் ரத்​தோட் 73 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 86 ரன்​கள் விளாசி​னார். அதர்வா டைடு 62, துருவ் ஷோரே 49, ரவி​கு​மார் சமர்த் 23 ரன்​கள் சேர்த்தனர். டெல்லி அணி தரப்​பில் இஷாந்த் சர்​மா, நவ்​தீப் சைனி, பிரின்ஸ் யாதவ், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

301 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி அணி 45.1 ஓவர்​களில் 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்ச​மாக அனுஜ் ராவத் 66 ரன்​கள் சேர்த்​தார். விதர்பா அணி சார்​பில் நாச்​சிகேத் பூதே 4, ஹர்ஷ் துபே 3, பிரஃபுல் ஹின்ஜ் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற விதர்​பா அணி அரை இறுதிக்​கு முன்​னேறியது.

<div class="paragraphs"><p>பிரப்​சிம்​ரன் சிங்</p></div>
மகளிர் புட்சால் கால்பந்து: மாலத்தீவுகளை பந்தாடியது இந்திய அணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in